Nov 27, 2022
தொழில்நுட்பம்

புதிய மகிந்திரா ஜி4

மகிந்திரா நிறுவனம், தனது அல்டுராஸ் ஜி4 மாடலில் அல்டுராஸ் 2வீல் டிரைவ் கொண்ட புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. அல்டுராஸ் ஜி4 181 பிஎஸ் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டது. புதிய மாடலில்360 டிகிரி கேமரா, சன்ரூப், மோட்டார் பவர் மூலம் இயக்கப்படும் டெயில்கேட்கள், கருப்பு மற்றும் டேன் நிறத்தில் உள்புற வடிவமைப்பு கொண்டதாக உள்ளது.

ஜி4 கார்கள் ஷோரூம் விலை சுமார் ரூ.30.68 லட்சம்  முதல் ரூ.31.88 லட்சத்துக்குள் உள்ளது. இந்த நிறுவனம், 4 வீல் டிரைவ் கொண்ட முந்தைய மாடலுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.