விமர்சனம்
வெல்வெட் நகரம் - விமர்சனம்
மலைவாழ் மக்களின் இருப்பிடத்தில் தொழிற்சாலை கட்ட விரும்பும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியை எதிர்த்து போராடுகிறார், சமூக ஆர்வலரும் மற்றும் சினிமா நடிகையுமான கஸ்தூரி. அந்த கம்பெனியை பற்றிய ரகசிய டாக்குமென்ட் கிடைத்ததை தொடர்ந்து, அதை மக்களுக்கு சொல்ல தனது தோழியும், டி.வி நிருபருமான வரலட்சுமியை அழைக்கிறார். அடுத்து வரும் சில நிமிடங்களில் கஸ்தூரி கொல்லப்படுகிறார். அந்த டாக்குமென்ட், தனது தோழி மாளவிகா சுந்தரின் வீட்டில் இருப்பதை அறிந்து செல்லும்போது, ரவுடி கும்பல் வீட்டிற்குள் நுழைகிறது.
பிறகு வரலட்சுமி என்ன ஆனார் என்பது கதை. பரபரப்பாக தொடங்கும் கதை திடீரென்று வீட்டுக்குள் முடங்கினாலும், அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார், இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன். பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் அதற்கு பேருதவி செய்துள்ளது. பத்திகையாளராக உள்ள ஒரு பெண்ணால் எவ்வளவு போராட முடியுமோ, அதை மட்டும் திரையில் செய்துள்ளார் வரலட்சுமி. இயல்பாக நடித்து இருக்கிறார், மாளவிகா சுந்தர்.
சினிமா நடிகையாக வரும் கஸ்தூரி, சில காட்சிகளிலேயே காணாமல் போய்விடுகிறார். பிரபல நடிகை கொலை, பெரிய பரபரப்பு இல்லாமல் கடந்து செல்கிறது. வில்லன் கூட்டம் அந்த வீட்டுக்குள் ஆக்கிரமிப்பது, பாரில் தன்னை அடித்தவனை திருப்பி அடிக்க மட்டுமே. அதற்கு ஏன் இவ்வளவு வன்முறை என்று புரியவில்லை. வரலட்சுமி தேடி வரும் டாக்குமென்ட், மாளவிகா சுந்தரின் வீட்டில் இருக்கிறது. அவர் ஏன் அதை மறைக்கிறார்? இதுபோன்ற லாஜிக் ஓட்டைகள் இருப்பினும், வெல்வெட் நகரத்தில் பரபரப்பு இருக்கிறது.