Feb 25, 2021
உலகம்

கொரோனாவுக்கு உலக அளவில் 2,137,893 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,137,893 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 99,732,581 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 71,714,828 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,408 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.