Jun 20, 2021
ஆலோசனை

வெற்றிலையின் மகிமை

நன்றி குங்குமம் தோழி

*வெற்றிலை சாறுடன் பூண்டு சாறு கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வரத் தேமல் மறையும்.

*தலைவலிக்கு 2.3 சொட்டு இச்சாற்றை நெற்றியிலும், மூக்கிலும் விட்டால், தலைவலி நீங்கும்.

*2 துளி வெற்றிலை சாற்றினை காதில் விட்டால் காதுவலி நீங்கும்.

*பால் தரும் தாய்மார்கள், பால் கட்டிக்கொண்டு, வீக்கம் ஏற்பட்டால், வெற்றிலையை தணலில் வாட்டி, அடுக்கடுக்காக வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

*தேள் கொட்டினால், வெற்றிலையில் 22 மிளகு வைத்துக் கொடுத்து, மென்று விழுங்கும்படி செய்தால் தேள் நஞ்சின் வீரியம் நீங்கும்.

*சாப்பிட்டதும், வெற்றிலையை மென்றால், எளிதில் ஜீரணமாகும்.

*இட்லி மாவு புளிக்காமலிருக்க, வெற்றிலைப் போட்டு வைத்தால், இரண்டு நாளானாலும் புளிக்காது.

தொகுப்பு: இல.வள்ளிமயில், மதுரை.