Jun 20, 2021
பாலிவுட் செய்திகள்

குட்டி ராதிகா போலீசில் புகார்

தனது திரைப்படத்தை யுடியூப்பில் வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை குட்டி ராதிகா போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழில் இயற்கை உள்பட பல படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி இவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2013ம் ஆண்டு குட்டி ராதிகா தயாரித்து நடித்த கன்னட படம் ஸ்வீட்டி நானா ஜோடி. 

இந்த படத்தை தன்னுடைய அனுமதி இல்லாமல் யுடியூப்பில் வெளியிட்ட மர்ம நபர் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில், ‘₹3 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்து நடித்தேன். என்னுடைய அனுமதியின்றி மோசடியாக யுடியூபில் மர்ம நபர் ஒருவர் படத்தை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.