Jul 29, 2021
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து; சவரன் ரூ.36,600-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் ரூ.36,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,575-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளியின் விலை ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.