Dec 07, 2021
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு: சவரன் ரூ.35,792-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து , சவரன் ரூ.35,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.4,474-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.