Mar 22, 2023
ஆரோக்கிய வாழ்வு

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள...

நன்றி குங்குமம் டாக்டர்

தினமும் சரியான உணவுடன், போதிய உடற்பயிற்சியை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நான்கே வாரத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். அவை என்ன வென்று பார்ப்போம்:

முதல் வாரம் உணவில் கவனம் செலுத்துங்கள்.

உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் செயல் பட உணவுமிக மிக முக்கியமானது. எனவே தினசரி, ஆரோக்கியமான சமச்சீர் உணவை உண்ண பழகிக்கொள்வது உடலைஃபிட்டாக வைக்க உதவும்.

இரண்டாவது வாரம் தூக்கத்தை மேம்படுத்துங்கள்.

தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் சரியான நேரத்திற்கு தூங்கி, சரியான நேரத்திற்கு எழுந்திரிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். போதிய அளவு தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால், மன அழுத்தமும் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். குறைந்தபட்சம் தினமும் ஏழு மணி நேரமாவது உறங்குங்கள்.

மூன்றாவது வாரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்:

தினமும் காலையில் தவறாமல் 45 நிமிடம் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் எந்த ஒரு இடத்திலும் லிஃப்ட் பயன் படுத்துவதை தவிர்த்து, முடிந்தளவு படிக்கட்டுக்களை பயன்படுத்தினால், அடிவயிறு மற்றும் தொடையில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, வயிறு மற்றும் தொடை ஃபிட்டாக இருக்கும்.

நான்காவது வாரம்நிரந்தரமாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

மேலே உள்ள மூன்று வார பயிற்சிகளையும் முறையாக கையாளுவதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள். நீங்கள் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

உங்கள் தினசரி அலுவலில்தியானம், யோகம் போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். தினசரி சிறிது நேரத்தை விளையாட்டுக்காகஒதுக்குங்கள். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். எனவே, இவைஅனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, உங்கள் வாழ்க்கையில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . உடல் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும்நிச்சயம் ஆகும்.