May 09, 2021
இந்தியா

பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்

தங்கவயல்: தங்கவயலில் உள்ள தேசிய பாறை ஆராய்ச்சி மைய (என்.ஐ.ஆர்.எம்) தலைமை விஞ்ஞானி ராஜன் பாபு  முக கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை எம் ஜி மார்க்கெட், பஸ் நிலையம், மற்றும் பிச்சப்பள்ளி கிராமம் ஆகிய இடங்களில், வேகமாக அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலை பரவல் குறித்தும், முக கவசம் அணிந்து, சானிடைசர் பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கட்டாயம் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினார். உரிகம் போலீஸ்  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வெங்டரமனப்பா உள்பட பலர் உடன் இருந்தனர்.