Mar 22, 2023
இந்தியா

பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்

டெல்லி: பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தலா ரூ.80 கோடியில் ஹைட்ரான் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரான் ரயிலை இயக்க ஒவ்வொரு வழித்தடத்தில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.