கோலிவுட் செய்திகள்
ஜென்டில்மேன் 2: மீண்டும் படம் தயாரிக்கிறார் கே.டி.குஞ்சுமோன்
தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். தற்போது ஜென்டில்மேன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்துள்ளார். விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அவர் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.