கோலிவுட் செய்திகள்
வெங்கட் பிரபு, நாக சைதன்யா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
ஐதராபாத்: வெங்கட் பிரபு, நாக சைதன்யா இணைந்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. மாநாடு படத்துக்கு பிறகு தெலுங்கு, தமிழில் உருவாகும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கிறார்கள். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைக்கிறார். ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு பெயரிடாமல் படப்பிடிப்பு நடந்தி வந்தனர்.
நேற்று நாக சைதன்யாவுக்கு பிறந்த நாள். இதையொட்டி படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு கஸ்டடி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவா என்ற போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா நடித்து வருகிறார்.
ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நாக சைதன்யா, கேக் வெட்டி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.