Mar 30, 2023
கோலிவுட் செய்திகள்

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

சென்னை: பேஷன் ஸ்டுடியோஸ் வழங்க, ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங், சென்னையில் தொடங்கியது. இன்னும் பெயரிடவில்லை. முக்கிய வேடங்களில் நட்டி (எ) நட்ராஜ் சுப்பிரமணியம், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் நடிக்கின்றனர். ஹீரோயின், வில்லன் முடிவாகவில்லை. கிரைம் திரில்லர் கதையுடன் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்படுகிறது.

கன்னட முன்னணி இசை அமைப்பாளரும், ‘காந்தாரா’ படத்துக்கு இசை அமைத்தவருமான பி.அஜ்னீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். ஏற்கனவே இவர், நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய ‘குரங்கு பொம்மை’ படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். ‘லவ் டுடே’ படத்துக்கும், ‘விலங்கு’ வெப்தொடருக்கும் ஒளிப்பதிவு செய்திருந்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் இணைந்து தயாரிக்கின்றனர்.