Mar 30, 2023
கோலிவுட் செய்திகள்

பிப்ரவரி 8ம் தேதி ஓடிடியில் துணிவு

அஜித்தின் துணிவு படம் வரும் 8ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது. அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மோகனசுந்தரம் உள்பட பலர் நடித்த படம் துணிவு. வினோத் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்தார். இந்த படம் கடந்த மாதம் பொங்கலையொட்டி திரைக்கு வந்தது.  இந்நிலையில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் நெட்பிளிக்சில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.