Jul 26, 2021
சற்று முன்

தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா

டெல்லி: தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா நிறுவனம். டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில உள்ள 14 அசையா சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவன அலுவலகங்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் ஏலத்தில் பங்கேற்கலாம். ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் www.airindia.in என்ற இணையத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.