Jul 26, 2021
சற்று முன்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் நேற்று மறுப்பு தெரிவித்தது. இதனால் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.