Dec 01, 2021
சற்று முன்

அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள், அவர்களை அவமரியாதை செய்யவில்லை எனவும் உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? என்று தமிழக அரசு, தலைமை செயலாளர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.