Mar 30, 2023
சற்று முன்

தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல்

சென்னை: தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர். படுக்கை அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்து வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிபட்டது. நெற்றி காயம் மற்றும் மேசை விளிம்பில் ரத்த கரையை வைத்து தடவியல் சோதனையிலும் உறுதி செயப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் வீட்டுக்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.