Oct 23, 2021
அரசியல்

சொல்லிட்டாங்க...

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும், சாதாரண மக்களுக்காகவும் மோடி அர்ப்பணித்து வருகிறார்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷா

நாளைய நாளை நல்ல நாளாக மாற்ற, இன்றைக்கு இந்தியாவை காக்கும் புனித போரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழ்நாட்டில் வாய்ப்பிருந்தால் உடனடியாகவோ இல்லாவிட்டால் படிப்படியாகவோ ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்த மண்ணில் பெரியார் எதிர்ப்பு என்பதுதான் சனாதன சக்திகளின் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
- விசிக தலைவர் திருமாவளவன்