Oct 27, 2021
அரசியல்

சொல்லிட்டாங்க...

* உலக வர்த்தகர்களும் வணிகர்களும் ஒன்றுகூடும் இடமாக நம்முடைய தமிழ்நிலம் இருந்துள்ளது. அத்தகைய பழம்பெருமையை மீட்டாக வேண்டும். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* 2024ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கு உள்ளது. அப்போது நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

* தமிழ்நாட்டு மாணவர்கள் தாய்மொழிவழி கல்வியை கைவிட்டு, பிறமொழிவழி கல்வி  முறைக்கு திணிக்கப்படுகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் உண்மையாகும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* எனது பயணம், அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான நமது உறவை மேலும் பலப்படுத்தும். - பிரதமர் நரேந்திர மோடி