May 22, 2022
அரசியல்

உ.பி. சட்டபேரவை தேர்தல்!: இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!!

டெல்லி: உத்திரப்பிரதேச சட்டபேரவை தேர்தலில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். உத்திரப்பிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறினார். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தவறிவிட்டது என்றும் அவர் சாடியுள்ளார். இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்திரப்பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.