Aug 13, 2022
மகப்பேறு மருத்துவம்

ஒன்றல்ல... இரண்டு!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒன்றுக்குப் பதில் இரண்டு கிடைத்தால் எப்போதும் மகிழ்ச்சிதான். உயிரற்ற பொருட்களில் தொடங்கி உயிருள்ள கரு வரை இந்த விதி பொதுவானது. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் அது விதிவிலக்கு.பெண்களில் சிலருக்கு மிக மிக அபூர்வமாக ஒன்றுக்கு பதில் இரண்டு கர்ப்பப் பைகள் அமைவதுண்டு.கர்ப்பப்பைதான் பெண்மைக்கே ஆதாரம். பெண்ணின் வாழ்க்கையில் பூப்பெய்துவது தொடங்கி மெனோபாஸ் வரை எல்லா நிகழ்வுகளும் கர்ப்பப்பையை மையம் கொண்டே நடந்து முடிகின்றன. அப்படி இருக்கும்போது ஒன்றுக்கு இரண்டு கர்ப்பப்பை இருந்தால் இன்னும் சிறப்புதானே என எடுத்துக்கொள்ள முடியாது.

இரட்டைக் கர்ப்பப்பை என்பது பிரச்னைக்குரிய விஷயம். அந்தப் பிரச்னை ஏன் வருகிறது? அது என்னவெல்லாம் செய்யும்? தீர்வுகள் உண்டா?சகலத்தையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.‘‘பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஒரு கர்ப்பப் பையும் இரண்டு சினைக்குழாய்களும் இரண்டு சினைமுட்டைப் பைகளும், ஒரு கர்ப்பப்பை வாயும் இருக்கும். அரிதாக சிலருக்கு கருவிலேயே வலது மற்றும் இடது பக்கத் திசுக்கள் சேர்ந்து ஒரே கர்ப்பப்பையாக மாறுவது தடை செய்யப்படுவதும் நடக்கும்.

அதன் காரணமாக கர்ப்பப்பையானது இரண்டு பிளவுகளாகப் பிரிந்து, இரண்டு வெவ்வேறு பைகளாக காணப்படும். சில நேரங்களில் மேல் பாகம் இரண்டாகவும், வாய் பகுதி ஒன்றாகவும் இருக்கலாம் அல்லது முழு கர்ப்பப்பையுமே இரண்டாகப் பிரிந்திருக்கலாம். இரண்டுக்கும் இடையில் திசுக்கள் இருக்கும்.கர்ப்பப்பையின் நடுவில் செப்டம் எனப்படுகிற திசுச்சுவர் இருக்கும். இது கரையாமல் இருந்தால் ஹஸ்ட்ரோஸ்கோப்பி கருவி மூலம் வெட்டிவிட்டு ஒரே அறையாக மாற்றலாம். இதன் பிறகு இரண்டாக இருந்த கர்ப்பப்பை ஒன்றாக மாறி விடும். இரண்டு பையும் தனித்தனியே அமைந்திருக்கும் பட்சத்தில் அதை இப்படி மாற்றுவது சாத்தியமில்லை.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமானதே தெரியாமல் மாதவிலக்கைத் தள்ளிப்போடவோ, வேறு பிரச்னைகளுக்காகவோ எடுத்துக் கொள்கிற ஹார்மோன் மாத்திரைகளின் விளைவும் இந்தப் பிரச்னை உருவாக முக்கிய காரணமாகிறது.சரி.... இரட்டை கர்ப்பப் பை இருந்தால் அப்படி என்னதான் பிரச்னை?வெளிப்படையாக எந்த அறிகுறியையும் காட்டாததால் பலருக்கும் இரட்டை கர்ப்பப்பை இருப்பதே தெரியாமல் போய் விடுவதுண்டு. வயிற்றுவலி, நீண்ட நாட்களுக்குத் தொடரும் மாதவிலக்கு, முதுகு வலி, அளவுக்கதிக வெள்ளைப் போக்கு, அடிக்கடி கரு கலைந்து போவது, கருத்தரிப்பது தள்ளிப்போவது... இவை எல்லாம் இரட்டைக் கர்ப்பப் பையின் அறிகுறிகளாக சந்தேகப்பட வேண்டியவை.

எப்படி கண்டுபிடிக்கலாம்?


ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கலாம். மருந்தைச் செலுத்தி எடுக்கப்படுகிற எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன், லேப்ராஸ்கோப்பி என இந்தப் பிரச்னையைக் கண்டறிய வேறு வழிகளும் உதவும்.என்ன ஆலோசனை?இரட்டை கர்ப்பப் பைகள் உள்ளதாக உறுதி செய்யப்படுகிற பெண்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு இவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படும். அப்படியே கர்ப்பம் தரித்தாலும் அது உறுதி செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து பிரசவ நாள் வரை அவர்களைத் தீவிரக் கண்காணிப்பில் வைத்துப் பராமரிக்க வேண்டியிருக்கும்.அப்படியானால் இரட்டை கர்ப்பப்பை உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா என்கிற கேள்வி வரும். அவர்களுக்கு ஐ.யு.ஐ. மற்றும் ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகளை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இந்த முறைகள் பலனளிக்கிற பட்சத்தில் சிலருக்கு அரிதாக இரண்டு கர்ப்பப் பைகளிலும் தலா ஒரு குழந்தை உருவாகவும் வாய்ப்புகள் உண்டு என்பது மகிழ்ச்சியான செய்தி.’’

- வி.லக்ஷ்மி
buy naltrexone click what is ldn used for
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
lowdosenaltrexone org is naltrexone addictive naltrexone nausea
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone s467833690.online.de revia side effects
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
opioid antagonists for alcohol dependence link naltrexone fibromyalgia side effects
alcohol implant treatment charamin.jp naltrexone prescription
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
order naltrexone saveapanda.com how naltrexone works
alcohol naltrexone charamin.com naltrexone uk
alcohol naltrexone charamin.com naltrexone uk