Nov 27, 2022
ஸ்பெஷல்

சிட்பண்ட் என்றால் என்ன?

சிட் பண்ட் என்பது ஒரு கூட்டு சேமிப்பு திட்டம். இதில் ஒரு குழுவினர் கலந்து கொண்டு ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒப்புக்கொள்ளப்பட்ட காலம் வரை செலுத்துகின்றனர். இந்த தொகையை செலுத்தும் சந்தாதாரர்கள் சீட்டு திட்ட காலத்தில், இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை ஆதாயத்துடன் ஒரு முறை பெறலாம். எனவே, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும், செலுத்தப்படும் தவணைகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். ஒவ்வொரு தவணையின் போதும் தொகையை பெறுபவர்கள் ஏலம் அல்லது குலுக்கல் முறை மூலம் தேர்ந்ததெடுக்கப்படுவார்கள்.

சீட்டு நிறுவனத்தின் பணி என்ன?
ஒரு சீட்டு நிறுவனம், சீட்டு திட்டத்தை நடத்தி நிர்வகித்து வருகிறது. குழுவில் சேர்ப்பதற்கான தகுதியான நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து திரட்டப்படும் முதலீட்டுத் தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு தவணையிலும், தொகையை பெறும் நபரை ஏலம்/குலுக்கல் நடத்தி தேர்ந்தெடுக்கிறது. சந்தாதாரர்களுக்கு தொகையை திரும்ப அளிப்பதற்கு உத்திரவாதம் அளித்து, அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை குறைக்கிறது. இந்த சேவைகளுக்காக சீட்டு கம்பெனி ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது.

சீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
சீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதால் டெபாசிட்டுகளை காட்டிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். இரண்டாவது மாதத்திலிருந்தே தொகையை பெற முடிவதால் வர்த்தகத்திற்கு, அவசரகாலத்திற்கு தேவைப்படும் தொகையை திரட்டி கொள்ளலாம்.

எப்பொழுது சீட்டு பணத்தை எடுக்கலாம்?
வாடிக்கையாளர்களது அவசர கால தேவைகள் அல்லது வர்த்தக முதலீட்டை செய்ய பணம் தேவைப்படும் போது சீட்டு பணத்தை எடுக்கலாம். மேலும் இதர முதலீட்டில் அதிக ஆதயாம் கிடைக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வதற்கும் இந்த சீட்டு தொகையை எடுக்கலாம்.

சீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதால் ஏமாற்றம் ஏற்படுமா?
40/1982ம் ஆண்டு சீட்டு கம்பெனி நிதியங்கள் சட்டத்தின் கீழ் சீட்டு கம்பெனிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன சட்டப்படி முதல் மாதத்தில் திரட்டப்படும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகை 1982ஆம் ஆண்டு சீட்டு நிதியங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது இந்த சட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யாமல் இயங்கி வருகின்றன. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலும், சில கம்பெனிகள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. எனினும், நம்பகமான நிறுவனங்களில் வாடிக்கையாளர் முதலீடு செய்தால் அந்த தொகை பாதுகாப்பாக இருக்கும்.

என்னென்ன வழிகளில் பணம் செலுத்தலாம்?
வாடிக்கையாளர்கள் தங்களது சந்தா தொகையை பணமாகவோ, ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ செக் ஆகவோ DD மூலமாகவோ செலுத்தலாம். செக் ஆக இருந்தால் ஏலம் எடுப்பதற்கு முன்னர் சரி பார்க்கப்படும்.

ஏலத்தில் எடுத்த பிறகு எவ்வளவு காலத்தில் பணம் கிடைக்கும்?
ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பிறகு ஆவணங்கள் நிறைவானதாக இருந்தால் பணம் வாடிக்கையாளருக்கு செலுத்தப்படும். ஏலம் குறிப்பிட்ட தேதியில் தொடங்கும் சந்தாதாரர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே குறைந்த பட்ச தொகைக்கு ஏலம் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும்.

சேமிப்பு அல்லது கடனினால் வருமான வரியில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன?
ஈவுத்தொகைக்கு வரி கட்ட வேண்டியது இல்லை. ஏலத்தொகை நஷ்டம் என்று காட்ட வேண்டுமென்றால் ஈவுத்தொகையை மதிப்பீட்டில் வருமானமாக காட்ட வேண்டும். அதனால் சீட்டினால் பெறப்பட்ட தொகைக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை.

சீட்டினால் ஏற்படக்கூடிய சேமிப்பு பயன்கள் என்ன?
மாதா மாதம் கட்டாய சேமிப்பு நடப்பதால் ஈவுத்தொகை கிடைக்கும். கடைசி மாதத்தில் எடுத்தால் கூட ஈவுத்தொகை வங்கியின் வட்டியை விட அதிகமாக கிடைக்கும்.

நான் எப்போது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்?
உறுப்பினர் முதல் மாதத்தில் இருந்தே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் நடப்பு தேதி வரை பணம் செலுத்தி இருக்க வேண்டும். நடப்பு தேதி வரை பணம் செலுத்தாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது.

ஏலத்தின் நோக்கம் என்ன?
ஒவ்வொரு குழுவிலும் சில நபர்களுக்கு பணம் தேவைப்படலாம். அதனால் பணம் தேவைப்படுபர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள். ஏலத் தேதியின் போது யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறாரோ அவர் தொகையை எடுத்தவராக அறிவிக்கப்படுவார்.

விதிமுறைகள்
* வசிப்பிடத்துடன் கூடிய அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
* வாடிக்கையாளர்கள் தங்களுது சந்தா தொகையை தினசரியோ வாராந்திரமாகவோ மாதாந்திரமாகவோ செலுத்தலாம்.
* வாடிக்கையாளர்களுக்கு மூன்றாவது தவணை செலுத்திய பிறகு இன்சூரன்ஸ் செய்து தரப்படும்.