Jun 18, 2021
விளையாட்டு

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகோவிச்

ரோம்: பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரான ரோம் மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார்.  ஜோகோவிச்  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதிய கால் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நடந்தது. இதில் அபாரமாக விளையாடிய சிட்சிபாஸ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 2வது செட்டிலும் 2-1 என முன்னிலை வகித்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.  இந்த போட்டி நேற்று தொடர்ந்து நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த ஓய்வை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது.  நேற்று நடந்த மற்றொரு கால் இறுதியில் இத்தாலியின் லாரன்சோ சோனிகோ 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவை வீழ்த்தினார்.