Dec 07, 2021
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

துபாய்: வெஸ்ட் இண்டீஸ்யை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. துபாயில் நடைபெறும் டி 20 உலக கோப்பை போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 18.2 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.