May 09, 2021
தமிழகம்

குட்டையில் மூழ்கி குழந்தை பலி

வேளச்சேரி: விழுப்புரம் மாவட்டம் கோரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். கொத்தனார். இவரது, மனைவி சிவகங்கை. இவர்களுக்கு 3 வயதில் நேசிகா என்ற பெண் குழந்தை இருந்தது. சிவகங்கை கடந்த 2 வாரத்திற்கு முன் பள்ளிக்கரணை, சாய் கணேஷ் நகர் வள்ளூர் 1வது தெருவில் உள்ள தாய் முனியம்மா வீட்டிற்கு தனது குழந்தை நேசிகாவை அழைத்து வந்து விட்டு  விட்டு ஊருக்கு சென்றுள்ளார். நேசிகா நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்திருந்தாள். அப்போது திடீரென காணவில்லை. அக்கம் பக்கத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்த குட்டையில் இறங்கி தேடியபோது அதில் நேசிகா இறந்து கிடந்தாள்.