May 09, 2021
தமிழகம்

கொரோனா பணிக்கு சென்ற டாக்டர் மீது போலீசார் தாக்குதல் கமிஷனர் விளக்கமளிக்க வேண்டும்

* மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
* தினகரன் செய்தி அடிப்படையில் நடவடிக்கை

மதுரை: கொரோனா பணிக்கு சென்ற டாக்டர், போலீசாரால் தாக்கப்பட்ட விவகாரத்தில், போலீஸ் கமிஷனர் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தினகரன் செய்தி அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை, கூடல் நகர், கலைவாணன் நகரை சேர்ந்தவர் தமிழரசன். ஹோமியோபதி டாக்டர். மதுரை அரசு மருத்துவமனை கொரோனா அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 10ம் தேதி இரவு டூவீலரில் மருத்துவமனைக்கு சென்ற இவரை தல்லாகுளம் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தினகரன் நாளிதழில் ேநற்று விரிவான செய்தி வெளியானது. இதனடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம், மதுரை போலீஸ் கமிஷனரிடம் அறிக்ைக கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், ‘‘கொரோனா பணிக்கு சென்ற  டாக்டர், போலீசாரால் தாக்கப்பட்டது தொடர்பான தினகரன் நாளிதழ் செய்தி அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இது ெதாடர்பாக மதுரை போலீஸ் கமிஷனர் 3 வாரத்தில் விரிவான அறிக்ைக தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது எந்தவித விளக்கமும் இல்லாவிட்டால் ஆணையம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்’’ என கூறப்பட்டுள்ளது. டாக்டர் தமிழரசன் கூறும்போது, ‘‘போலீசாரின் அத்துமீறல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது, எனக்கு ஆறுதலைத் தந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் நடவடிக்கை என்னைப் போன்ற பாதித்த பலருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும்’’ என்றார்.