Jul 26, 2021
தமிழகம்

வத்திராயிருப்பில் கண்மாய் மதகுகளை இரவில் திறந்து விடும் மர்ம நபர்கள்

* நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் நெல் விவசாயம் பிரதான தொழிலாகும். கடந்த பருவமழை காலத்திலும், இடைப்பட்ட புயல், மழை காலத்திலும் பிளவக்கல் பொியாறு, கோவிலாறு ஆகிய அணைகளுக்கு மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் பொியாறு அணையில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்ததையடுத்து திறந்து விடப்பட்டு அணைகளுக்குப் பாத்தியப்பட்ட பூாிப்பாறைகுளம் சீவனோி, குணவந்தனோி, பெத்தான்குளம், கொடிக்குளம், விராக சமுத்திரயம், வத்திராயிருப்பு பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரம்பின. தற்போது வரை பல கண்மாய்களில் தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் வத்திராயிருப்பு பொியகுளம் கண்மாயில் மீன்பாசி ஏலம் குத்தகைதாரர், இருக்கின்ற தண்ணீரை மதகு வழியே இரவு நேரத்தில் அதிக அளவு திறந்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அர்ச்சுனாபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாலகுரு கூறியதாவது: வத்திராயிருப்பு பகுதியைப் பொறுத்தவரை நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மழை பெய்து வருவதால் பொியகுளம் கண்மாயில் தற்போதுவரை தண்ணீர் உள்ளது. இதனை வைத்து பருவகாலம், கோடைகாலம் ஆகிய இரண்டு காலத்திலும் நெல் விவசாயம் செய்து அறுவடை செய்துள்ளோம். அடுத்ததாக நெல் விவசாயம் செய்வதற்கு நெல் விதை பாவி நாற்றாக உருவெடுப்பதற்கு கண்மாயில் உள்ள தண்ணீர் தேவை. மேலும் அடுத்த விவசாயத்திற்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. கண்மாயில் தண்ணீர் இருப்பதால் விவசாய கிணறுகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக இரவு நேரங்களில் மீன்பாசி குத்தகைதாரர்கள் தண்ணீரை திறந்து விடுகின்றனர். இதனால் கண்மாயில் உள்ள தண்ணீர் வௌியேறிச் சென்றால் இதை நம்பியுள்ள விவசாயிகள் எப்படி விவசாயம் செய்ய முடியும்? எனவே, கண்மாயில் தண்ணீரை திறந்து விடுபவர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.