Sep 19, 2021
தமிழகம்

தமிழகத்தில் புதிதாக 1,808 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,43,403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,808 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 1,046 பேர் ஆண்கள், 762 பெண்கள் ஆவர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,447 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 24,91,222 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் வீட்டுதனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23,364 ஆக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் நேற்று உயிரிழந்தனர்.