Oct 23, 2021
தமிழகம்

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் 20,000 பேர் மனுத்தாக்கல்

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள, 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, இதுவரை 20,074 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  உள்ளாட்சி தேர்தலுக்காக கடந்த 15ம்தேதி முதல் இதுவரை 9 மாவட்டங்களில் மொத்தம் 20,074 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை 16,420 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 3243 பேரும்,  வேட்புமனு அளித்துள்ளனர்.  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 385 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 26 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 20,074 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.