Dec 01, 2021
தமிழகம்

நெமிலி அருகே ஏரிக்கு செல்லும் கால்வாய்கள் தூர்வாராததால் சாலையில் தேங்கி வீணாகும் நீர்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி : தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியில் பெய்து வரும் மழையின்  காரணமாக பல்வேறு ஆறுகளில்   நீர் வரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய 3வது ஏரியாக காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில்  காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு பல்வேறு ஏரிகளுக்கு சென்று வருகிறது.
 இந்நிலையில், காவேரிப்பாக்கம் ஏரியில்  இருந்து திறக்கப்பட்ட நீர் பனப்பாக்கம், நெடும்புலி வழியாக உள்ள கால்வாய்கள் மூலம்  ரெட்டிவலம் ஏரிக்கு செல்கிறது.

இதில் நெடும்புலி, பனப்பாக்கம் பகுதியில் உள்ள  கால்வாய்கள் சீரமைக்கப்படாததால்   தண்ணீர் அதிகளவு வரும்போது கால்வாய்க்கு மேல் நீர் குடியிருப்பு பகுதிக்கு செல்ல கூடிய அபாயம் உள்ளது. கால்வாயில் வரும் நீர் வருவாய் அலுவலர் குடியிருப்பு பகுதியில் சாலையிலேயே வீணாக செல்கிறது. எனவே, ஏரிக்கு செல்லும் கால்வாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.