Dec 01, 2021
தமிழகம்

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரிப்பால் பைக்கை விற்று குதிரை வாங்கி போக்குவரத்துக்கு பயன்படுத்தி வரும் விவசாயி-தெலங்கானாவில் ருசிகரம்

திருமலை : தெலங்கானா மாநிலம், கத்வால் மாவட்டம், முலகலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குர்ரம் நரசிம்மா, விவசாயி. இவர் தனது போக்குவரத்திற்காக பைக் ஒன்று வைத்திருந்தார்.
இந்நிலையில், நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் குர்ரம்நரசிம்மாவின் போக்குவரத்து செலவும் அதிகரித்து வந்துள்ளது. எனவே போக்குவரத்து செலவை கட்டுப்படுத்த ஆலோசித்த குர்ரம் நரசிம்மா ைபக்ைக விற்று விட்டு போக்குவரத்திற்கு குதிரை பயன்படுத்த முடிவு செய்தார்.

அதன்படி, தனது பைக்கை தனிநபர் ஒருவரிடம் ₹22 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். தொடர்ந்து, அந்த பணத்தில் ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம்,  புரேதட்டூரில் உள்ள தனது உறவினர் மூலம் குதிரை ஒன்றை வாங்கினார். தற்ேபாது குர்ரம் நரசிம்மா தினமும் விவசாய நிலத்திற்கும், வெளியூர்களுக்கும் தன்னுடைய குதிரை மூலம் சென்று வருகிறார். இதனால், பண விரயம் குறைந்து வருவதாக குர்ரம் நரசிம்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், `சிறுவயதில் இருந்தே குதிரையில் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். இருப்பினும், பைக்கை பயன்படுத்தி வந்தேன். ஆனால், ெபட்ரோல் விலை தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் ₹100 வரை விற்கப்படுகிறது. இதனால், பைக்கிற்கு பெட்ரோல் போட மாதம் ஒன்றுக்கு ₹2 முதல் 3 ஆயிரம் வரை செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.

எனவே, பைக்கை விற்று குதிரை வாங்கி பயன்படுத்தி வருகிறேன். எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வீட்டில் இருந்து நிலத்திற்கும் செல்லும்போது குதிரையை மேய்ச்சலுக்கு விட்டுவிடுவேன். எனவே எனக்கு போக்குவரத்து செலவு ஏதும் இல்லை. தற்போது எனக்கு பண விரயமும் முற்றிலும் குறைந்துள்ளது. என்றார்.