Aug 18, 2022
தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்ட இடைத்தேர்தல் மது கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடைத்தேர்தல் (நகர்ப்புறம் மற்றும் ஊர்புற தேர்தல்) வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வருகிற இன்று காலை 10 மணி முதல் 9ம்  தேதி நள்ளிரவு வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள சில்லறை மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.

அதேபோல, அதனுடைய உடன் உள்ள பார்களும், அனுமதி பெற்ற ஓட்டலில் உள்ள பார்களும் மூடப்பட வேண்டும். அதை தொடர்ந்து வரும் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும், டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும். மீறி மதுபான கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.