Mar 22, 2023
தொழில்நுட்பம்

டாடா நெக்சான் இவி

டாடா நெக்சான் நிறுவனம், தனது எலக்ட்ரிக் வாகனத்தின் விலையை ரூ.85,000 வரை குறைத்துள்ளது. நெக்சான் எலக்ட்ரிக் கார்களில் துவக்க மாடலான பிரைம் எக்ஸ்எம் ஷோரூம் விலை முன்பு ரூ.14.99 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.50,000 குறைத்து, ரூ.14.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பிரைம் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் கார்கள் விலை தலா ரூ.31,000 குறைக்கப்பட்டு, முறையேரூ.15.99 லட்சம் எனவும், ரூ.16.99 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மேக்ஸ் எம்எம் பிளஸ் (3.3 கிலோவாட்), எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (3.3 கிலோவாட்), மேக்ஸ் எக்ஸ்எம் (7.2 கிலோவாட்), மேக்ஸ் எக்ஸ்இசட் பிளஸ் (7.2 கிலோவாட்), மேக்ஸ் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (7.2 கிலோவாட்) ஆகியவை தலா ரூ.85,000 குறைக்கப்பட்டுள்ளன. இவற்றில் டாப் வேரியண்டான மேக்ஸ் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (7.2 கிலோவாட்) ஷோரூம் விலை ரூ.18.99 லட்சமாக உள்ளது.