Mar 22, 2023
தொழில்நுட்பம்

போர்ஷே 718 கேமன் ஜிடி4 ஆர்எஸ்

போர்ஷே நிறுவனம், 75 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, போர்ஷே 718 கேமன் ஜிடி4 காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 4.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 494 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இது ஏற்கெனவே உள்ள ஜிடி4 மாடலை விட சுமார் 80 பிஎச்பி அதிகம். இதுபோல், 450 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

இது ஏற்கெனவே உள்ள மாடலை விட 30 என்எம் அதிகம். 718 ஜிடி4 வரிசையில் ஸ்போர்ட் வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.