Mar 22, 2023
தொழில்நுட்பம்

பிரான்க்ஸ், ஜிம்னி முன்பதிவு விறுவிறுப்பு

மாருதி சுசூகி நிறுவனம், ஆட்டோ வாகன கண்காட்சியில் பலேனோ காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரான்க்ஸ் என்ற காரையும், ஜிம்னி என்ற எஸ்யுவியையும் அறிமுகம் செய்திருந்தது. இவற்றுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே துவங்கி விட்டன. ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இதற்கான விலை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுபோல் ஜிம்னி கார்  ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.  அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை  நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 என, ஜிம்னி 10,000 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், பிரான்க்ஸ் தினமும் சராசரியாக 300 கார்களுக்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டு, இதுவரை 4,000 முன்பதிவுகளை தாண்டி விட்டதாகவும் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.