தொழில்நுட்பம்
ஹூண்டாய் அவ்ரா பேஸ்லிப்ட்
ஹூண்டாய் நிறுவனம், அவ்ரா பேஸ்லிப்ட் காரை இந்தியச்சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரட்டை எரிபொருள் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இவற்றில் இ, எஸ், எஎக்ஸ், எஸ்எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) என 5 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இன்ஜின் கொண்ட இ வேரியண்டின் ஷோரூம் விலை சுமார் ரூ.6.3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்எக்ஸ் (ஓ) வேரியண்ட் சுமார் ரூ.8.58 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கில் எஸ்எக்ஸ் பிளஸ் வேரியண்ட் மட்டும் உள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ.8.73 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரட்டை எரிபொருளாக, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் கொண்ட மாடலில் எஸ் (ஷோரூம் விலை சுமார் ரூ.8.1 லட்சம், எஸ்எக்ஸ் (ஷோரூம் விலை சுமார் ரூ.8.87 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
சிஎன்ஜியில் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும் 95.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் முன்புற தோற்றம் சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. வேரியண்ட்களுக்கு ஏற்ப அம்சங்கள் மாறுபடும்.இந்தக் கார் சுசூகி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.