May 09, 2021
தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி எப்62 (விலை சுமார் ₹23,999)

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எப்62 மொபைல் போன் அறிமுகம் செய்துள்ளது. 6.7 அங்குல சூப்பர் அமோலெட் டிஎஸ்பிளே கொண்ட இதில்,  கேமிங் பிரியர்களை மனதில் கொண்டு எக்சினோஸ் 9825 பிராசஸர் நிறுவப்பட்டுள்ளது. பின்புறம் 64 மெகாபிக்சல் உட்பட 4 கேமராக்கள், 32 எம்பி  செல்பி கேமரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. ஆன்டிராய்டு 11ல் இயங்குகிறது. அறிமுகச்சலுகை விலையாக 6 ஜிபி  ரேம், 128 ஜிபி மெமரி சுமார் ₹23,999 மற்றும் 8 ஜிபி வேரியண்ட் சுமார் ₹25,999 என விற்பனை செய்யப்படுகிறது.