May 09, 2021
தொழில்நுட்பம்

லினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)

லினோவோ நிறுவனம், புதிய எல்இடி ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும்  வகையில் இதன் எல்இடி திரை வடிவமைக்கப்பட்டுளளது. ஆம்லாஜிக் ஏ113எக்ஸ் பிராசஸர், 1.5 அங்குல 3 வாட்ஸ் ஸ்பீக்கர், மைக்ரோபோன், கூகுள்  அசிஸ்டென்ட் உள்ளன. இதில் உள்ள யுஎஸ்பி போர்ட்டில் மொபைல் போன் உட்பட எதையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் கடிகாரம்,  நாள்காட்டியில் உள்ள அடுத்த நாள் நிகழ்ச்சிகள் மற்றும் சூரிய உதயத்துக்கு ஏற்ப அலாரம் ஒலிக்கும். துவக்க விலை சுமார் ₹4,499.