May 19, 2022
தொழில்நுட்பம்

சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்காக கோவர்த்தன் பூஜையில் சாட்டையடி வாங்கிய பூபேஷ் பாகல்

சத்தீஸ்கர்: வட இந்தியாவில் கொண்டாடப்படும் கோவர்த்தன் பூஜையில் கடைபிடிக்கப்படும் சடங்கு காரணமாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டது. பாவம் தொலைந்து புண்ணியம் பெருகி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வளர்ச்சி கிடைக்க வேண்டி துர்க் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நடத்தப்பட்ட கோவர்த்தன் பூஜையில் அவர் பங்கேற்றார். அப்போது சடங்கு காரணமாக பூபேஷ் பாகலின் கை மீது 8 முறை சாட்டையால் அடி கொடுக்கப்பட்டது.

இதே போன்று மத்தியபிரதேச மாநிலத்தில் உஜ்ஜன் என்ற இடத்தில் நடைபெற்ற கோவர்த்தன் பூஜையில் அம்மாநிலத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஃகான் கலந்து கொண்டார். அங்கு வழிபாடு நடத்தியவர் பின்னர் மரக்கன்றுகள் நாட்டார். தீபாவளிக்கு அடுத்த நாளில் ஆண்டுதோறும் கோவர்த்தன் பூஜை வடஇந்திய மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.