Sep 30, 2022
தொழில்நுட்பம்

வேளாண் சட்டங்கள் ரத்து: உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

டெல்லி: விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை நாடு முழுவதும் இன்று கொண்டாட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற பிரதமர் மோடி அறிவிப்பை அடுத்து இன்று விவசாயிகளின் வெற்றி பேரணி நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டாரம் வாரியாக காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வெற்றி பேரணி நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்து வெற்றியை பகிர்ந்துகொள்ளுமாறு நிர்வாகிகளை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் இரவு 1மணி அளவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.