Nov 27, 2022
தொழில்நுட்பம்

டாடா பஞ்ச் கேமோ எடிஷன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா பஞ்ச் கேமோ எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4 வேரியண்ட்கள் உள்ளன. இந்தியாவில் அறிமுகம் செய்து ஓராண்டு நிறைவையொட்டி இந்த புதிய கார் களமிறக்கப்பட்டுள்ளது. டூயல் டோனில் பச்சை வண்ணத்தில் வெளிவந்துள்ள இந்த காரின் உட்பகுதியிலும் பச்சை தீம் காணப்படுகிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்களில் கிடைக்கிறது. துவக்க மாடலான அன்வஞ்சர் மேனுவல் விலை சுமார் ரூ.6.85 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் ரூ.7.45 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான அக்கப்ளிஷ்டு டாஷில் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.8.63 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.