Feb 05, 2023
தொழில்நுட்பம்

ஜீப் கிராண்ட் செரோக்கி

ஜீப் இந்தியா நிறுவனம், புதிய கிராண்ட் செரோக்கி காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 272 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், 4 வீல் டிரைவ் கொண்டது. ஆட்டோ, ஸ்போர்ட், மட், ஸ்நோ என 4 டிரைவிங் மோட்கள் உள்ளன. 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப் உள்ளிட்ட வசதிகள் உள்ளன உள்ளது. முந்தைய தலைமுறை கிராண்ட் செரோக்கி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் வெளிவந்தது.

தற்போது புதிய செரோக்கி பெட்ரோல் இன்ஜினில் மட்டும் வெளியாகியுள்ளது. ஷோரூம் துவக்க விலையாக சுமார் ரூ.77.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வால்வோ எக்ஸ்சி90, ரேஞ்ச் ரோவர் வெலார், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, ஆடி கியூ7 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.