May 22, 2022
விமர்சனம்

த டென் கமாண்ட்மென்ட்ஸ் - திரை விமர்சனம்

ஹாலிவுட் திரைப்பட உலகின் தந்தை என போற்றப்படும் செசில் பி. டிமில், 1956 ஆம் ஆண்டு, த டென் கமாண்ட்மென்ட்ஸ் என்கிற ஒரு பிரமாண்டமான படத்தை உருவாக்கியிருந்தார்! 220 நிமிடங்கள் ஓடும் அத்திரைப்படம் மிக சிறந்த திரை படைப்புகளில் ஒன்றென இன்று வரையில் கொண்டாடப்படுகிறது!
இந்தியாவிலும் கூட, மும்பை, தில்லி , கொல்கத்தா, ஹைதெராபாத் பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் 50 வாரங்களுக்கு மேலாக ஓடி சாதனைப் படைத்தது.

இதன் ரீமேக் படம் ’த டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என அதே பெயரில் மீண்டும் வெளியாகியுள்ளது, மிஷன் இம்பாஸிபிள் 2 மற்றும் பட்ட ஒமன் ( 2022 ) ஆகியவற்றின் மூலம் புகழ் பெற்ற டௌக்ரே ஸ்காட் மோஸஸாக நடித்துள்ள இந்தப் புதிய படத்தை இயக்கியுள்ளார். எதிர்காலத்தில் இன்று பிறக்கும் குழந்தையில் ஒருவன் அரச பீடத்திற்கு ஆபத்தாக மாறுவான் என மத குருக்களின் சொற்படி ஊரில் புதிதாக பிறந்த குழந்தைகள் அத்தனை பேரையும் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கிறார் எகிப்து அரசன்.

அதில் மோஸஸைக் காப்பாற்றுவதற்காக அவரது தாயார், அவரை ஒரு கூடையில் வைத்து நைல் நதியில் அனுப்பி விடுகிறார்.  சந்தர்பவாசமாக, அரசனின் மகள் பித்யா ,  அக்குழந்தையை தன் குழந்தையாக எடுத்து வளர்கிறாள்! பித்யாவிற்கு மினெரித் எனும் ஒரு மகன் பிறக்க, இருவரும் சகோதரர்களாக வளர்கிறார்கள்.

சிறு வயது முதலே அடிமை மக்களைக் கண்டு வருந்தும் மோஸஸ் அவர்களுக்காகக் குரல் கொடுக்க , அரச துரோகம் என நாடுகடத்தப்படுகிறார். மோட்சம் பெற்று மீண்டும் எகிப்து வரும் மோஸஸ் அடிமை மக்களுக்காக குரல் கொடுக்கிறார். முடிவு என்ன என்பது மீதிக் கதை. டௌக்ரி ஸ்காட்தான் படத்தின் ஒற்றை பலமாக தன் பாத்திரத்தில் அப்படியே எக்ப்தியா வாழ்க்கையைக் கண்முன் பிரதிபலிக்க, நவீன் ஆண்ட்ரூஸ் , மினெரித் கேரக்டரில் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

கிளாசிக் கிறிஸ்துவ , இஸ்லாமிய கதையாக சொல்லப்படும் இப்படம் ராபர்ட் டோர்ன்ஹெல்ம் இயக்கத்தில் பிரம்மாண்டமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் பழைய கதையில் இருந்து மாற்றம் பெற்றிருப்பது சின்ன நெருடல். மொத்தத்தில் பழைய நினைவுகளைத் தட்டி எழுப்ப நினைப்போர் நிச்சயம் தவிர்க்க முடியாத படம் இந்த ‘த டென் கமாண்ட்மென்ட்ஸ்’.