May 09, 2021
உலகம்

விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலகளவில் 13.59 கோடி பேருக்கு பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 29.38 லட்சம் ஆக உயர்வு

லண்டன்: உலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; 29.38 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.93 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 66,754 பேருக்கு கொரோனா; ஒரேநாளில் 740 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3.32 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 5.75 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரேநாளில் 69,592 பேர் பாதிப்பு; 2,535 பேர் பலி, மொத்த பாதிப்பு 1.39 கோடி; 3.51 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,59,49,514 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,93,57,713 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 38 ஆயிரத்து 810 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றுக்கு தற்போது 2,36,52,991 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,606 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.