Jan 21, 2022
உலகம்

உலகில் கொரோனாவால் 26.66 கோடி பேர் பாதிப்பு : அமெரிக்காவில் 5 கோடியை தாண்டியது!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.66 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
 
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைத் தாண்டியது.கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.66 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.76 லட்சத்தைத் தாண்டியுள்ளது.வைரஸ் பரவியவர்களில் 2.11 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 87 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 80,629 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதன் மூலம் கொரோனாவால் 50,123,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் 555 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 809,980 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.