Mar 22, 2023
உலகம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர், அரசியல்வாதி, ராணுவ ஜெனரல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்.

79 வயதான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பர்வேஸ் முஷாரப் பிறந்தார். தேச பிரிவினையின்போது முஷாரப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது.

1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். பர்வேஸ் முஷாரப் 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார். பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்தபோது இந்தியாவின் கார்கிலில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்தார். அதே ஆண்டில் துபாயிலிருந்து பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் நடைபெற்ற பேரணியின்போது கொல்லப்பட்டார். 2008இல் ஆகஸ்ட் 18ம் தேதி இவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.