Jan 20, 2020
பாலிவுட் செய்திகள்

நடிகை அறைக்குள் பாய்ந்த ரசிகர்

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிக்கும் படம் சாஹோ. சுஜித் இயக்குகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் ஈவ்ளின் ஷர்மா. சமீபத்தில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்து அசத்தினார். படப்பிடிப்பு முடிந்து அவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு புறப்பட்டார். அப்போது நடிகையின் வரவுக்காக எதிர்பார்த்திருந்த ரசிகர் ஒருவர் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஈவ்ளின் ஷர்மா அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றார்.

அப்போது அங்கு தயாராக காத்திருந்த ரசிகர் ஒருவர் பாய்ந்து சென்றார். அவரைக்கண்டதும் ஈவ்ளின் அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த தனது மேனேஜரை அழைத்து ரசிகரைப்பற்றி புகார் தெரிவித்தார். உடனே ரசிகரிடம் சமாதானமாக பேசி அவரை வெளியேற்றினார் மேனேஜர். இதுகுறித்து ஈவ்ளின் கூறும்போது, ‘ரசிகர்களை எனக்கு பிடிக்கும், ஆனால் இதுபோல் ஹோட்டல் அறையில் காத்துக் கொண்டிருப்பது எல்லாம் ஓவராக இருக்கிறது. அதேசமயம் பயமாகவும் இருக்கிறது’ என்றார்.