Jul 11, 2020
பாலிவுட் செய்திகள்

பாலிவுட் செல்லும் மாளவிகா மோகனன்

கேரளாவை  சேர்ந்தவர் மாளவிகா மோகனன். பட்டம்போலே என்ற மலையாள படத்தில் அறிமுகமான  அவர் அதன் பிறகு ஒரு மலையாளப் படத்திலும் ஒரு கன்னட படத்திலும்  நடித்திருந்த நிலையில் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பியாண்ட் தி  கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் ஆனார். தமிழில்  பேட்ட படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்  ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் மாளவிகா மோகனன் பாலிவுட்டுக்கு  செல்கிறார். அவர்  பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.  ஸ்ரீதேவியின் கடைசி திரைப்படமான  மாம் படத்தை இயக்கிய ரவி உத்யாவர்  இயக்கும் புதிய  படத்தில்  நடிக்கிறார். கல்லி பாய் படத்தில் நடித்த  சித்தாந்த் சதுர்வேதி ஹீரோ. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு  தொடங்குகிறது.