Jan 22, 2021
பாலிவுட் செய்திகள்

300 கிலோ மீட்டர் பைக் பயணம் செய்த சம்யுக்தா

கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சம்யுக்தா ஹெக்டே, தமிழில் வாட்ச்மேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கோமாளி, பப்பி படங்களில் நடித்தார். சம்யுக்தா, சாகசங்கள் செய்வதில் ஆர்வம் மிக்கவர். அவரது புதிய சாகசம் பெங்களூரில் இருந்து சிக்மகளூருக்கு சுமார் 300 கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘பெண்களுக்கு தங்கம்தான் சிறந்த நண்பன் என்று யார் சொன்னது? எனக்கு என் பைக்தான் சிறந்த நண்பன். பெங்களூரில் இருந்து சிக்மகளூருக்கு சென்றது எனது பயணத்தின் சிறிய பகுதிதான். என் நண்பனுடன் இன்னும் நிறைய தூரம் பயணிக்க திட்டம் வைத்திருக்கிறேன்’ என்று கூறுகிறார் சம்யுக்தா.